1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
ஒருவீட்டுக்கு விருந்தினராகச் செல்கிறோம் என்றால், காலையில் போய் விட்டு மாலைக்குள் திரும்பி விடுவது தான் மரியாதை. அங்கேயே ஒருவாரம், பத்துநாள் டேரா போடுவது என்பதெல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்துவராது. மீறி தங்கினால், தேவையற்ற கருத்து வேறுபாடுதான் வரும். பெற்றவர்கள் கூட, பிள்ளைகள் வீட்டில் குறைந்த நாள் தான் தங்க வேண்டிய சூழல் இருக்கிறது. விலைவாசி மற்றும் குடும்பச்சூழல் அப்படி! ஒரு கதையைக் கேளுங்க! ஒரு வாத்து முட்டைகளை குஞ்சு பொரித்தது. எப்படியோ, அன்னப்பறவையின் முட்டை ஒன்றும் அதனுள் கலந்து விட்டது.
குஞ்சு பொரித்ததும், மற்ற குஞ்சுகள் சுமாரான நிறத்தில் இருந்தன. அன்னப்பறவை குஞ்சு மட்டும் வெள்ளை வெளேரென இருந்தது. அது மட்டுமல்ல! வாத்துக்கள் சாய்ந்து சாய்ந்து நடந்தன. அன்னப்பறவையின் நடையழகோ அபாரமாய் இருந்தது. இதைக் கண்ட தாய் வாத்தும், மற்ற குஞ்சுகளும் அன்னக்குஞ்சு மீது பொறாமை கொண்டன. தேவையில்லாமல் அதைத் தொந்தரவு செய்தன. கொத்திக் காயப்படுத்தின. அப்போது, அன்னப்பறவை கூட்டம் ஒன்று அங்கு வந்தது. தங்கள் குஞ்சு ஒன்று வாத்துக் கூட்டத்துடன் இருப்பதைப் பார்த்து, அன்னக்குஞ்சே! நீ எங்கள் இனமல்லவா! மந்த புத்தியுள்ள இந்த வாத்துகளுடன் ஏன் இருக்கிறாய். இதோ! இந்த நீர் நிலையில் உன் உருவத்தைப் பார்.
எங்களைப் போலவே இருப்பாய், உயரத்தில் பறக்கும் சக்தியும் உனக்கு உண்டு என்றன. அப்போது தான் அன்னக்குஞ்சுக்கு, தான் ஏன் துன்புறுத்தப்பட்டோம் என விளங்கியது. அது தன் இனத்துடன் சேர்ந்து பறந்து விட்டது. அவரவர் இடத்தில் இருந்தால் தான் அவரவருக்கு மதிப்பு! தெரியாமல் வந்த அன்னக் குஞ்சுக்கே அந்தக்கதியென்றால், தெரிந்தே விருந்தினர் இல்லங்களுக்குச் செல்பவர்களுக்கு என்ன கதி வரும் என சொல்லியா தெரிய வேண்டும்! விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது அந்தக்காலத்திலேயே இருக்கிறபழமொழி.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment