1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
அரசன் ஒருவன் தன் மகனை குருகுலத்துக்கு அனுப்பி வைத்தான். மற்ற மாணவர்களுடன் அவன் சமமாக அமரமாட்டான். குரு அமர்ந்திருக்கும் மரத்தடி திண்டில் உட்கார்வான். ஆசிரியரை தனது அடிமை போலவே அவன் கருதினான். அரசனின் மகன் என்ற கர்வம் அவனை ஆட்டிப்படைத்தது.
இதுபற்றி அறிந்த அரசன், குருவுக்கு ஒரு ஓலை எழுதினான். குருவே! நீங்கள் என் மகன் என்ற காரணத்துக்காக சலுகை அளித்தால் குழந்தை கெட்டுப் போவான். மற்ற மாணவர்களைப் போலவே அவனை நடத்துங்கள். மாணவனுக்கு சலுகை தரும் ஆசிரியரும், பிள்ளைக்கு செல்லம் கொடுக்கும் தந்தையும் சமூகத்திற்கு ஆகாதவர்கள். அவனது எதிர்காலம் நம் இருவர் கையிலும், என எழுதியிருந்தான்.
இதைப்படித்த ஆசிரியர், இளவரசனிடமே அதைக் கொடுத்தார். இனி, தன் ஜம்பம் எடுபடாது, தந்தையாரே தனக்கு சாதகமாக இல்லை என்பதைப் புரிந்து கொண்ட இளவரசன், மற்ற மாணவர்களுடன் அமர்ந்து, ஆசிரியருக்கு தக்க மரியாதை தந்து பாடம் கற்றான். இப்போதெல்லாம் சில பிள்ளைகள் செய்யும் கூத்தை, பெற்றோர் கண்டுகொள்வதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்தக்கதை.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment