1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
பள்ளியில் பாடம் நடந்து கொண்டிருந்தது. தமிழாசிரியர் சகவாச தோஷம் பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். மாணவர்களே! படிக்கும் பருவம் மிக முக்கியமானது. உங்கள் நண்பர்களைப் பொறுத்தே எதிர்கால வாழ்வு அமையும் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் கண்டதும் நட்பு பாராட்டி நண்பராக மாறி விடுகிறீர்கள். தீயவர்களிடம் பழகும் நல்லவனும் கெட்டுப் போவான். நல்லவர்களிடம் பழகும் தீயவனும் நல்லவன் ஆவான். அதனால், மாணவர்களாகிய நீங்கள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து பழகுவதில் கவனமாக இருக்கவேண்டும், என்று அறிவுரை சொன்னார்.
அப்போது ஒரு மாணவன், ஐயா! தீயவர்களுடன் பழகும் நல்லவன் அவர்களைத் திருத்த முயற்சிக்கலாமே! என்று கேட்டான். அதற்கு பதிலளித்தார் ஆசிரியர். அண்டா நிறைய தண்ணீர் இருக்கிறது. அதில் ஒருகுவளை பாலை கலந்தால் என்னாகும்? பால் தன் நிலையை இழந்து விடும். அதேசமயத்தில் ஒரு அண்டா பாலில், ஒரு குவளை தண்ணீரைச் சேர்த்தால் அது பாலின் தன்மையைப் பெற்று விடும். இதுபோல் தான் நட்பும்! பிறவிக்குணத்தை மாற்றுவது சிரமம், என்றார். ஆசிரியரின் விளக்கம் மாணவனுக்கு சரியெனப்பட்டது.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment