Tourist Places Around the World.

Breaking

Tuesday, 25 August 2020

நிஜமான "சாமி"யார் - ஆன்மீக கதைகள் (460)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


ஆற்றங்கரை அரசமரத்தடிப் பிள்ளையார் கோயிலில் சாமியார் ஒருவர் இருந்தார். பசித்தால் ஊருக்குள் சென்று பிச்சை கேட்பார். மற்றபடி, ஒரு குண்டுக்கல் மீது அமர்ந்திருப்பார். இதனால் மக்கள் குண்டுக்கல் சாமியார் என்று அழைத்தனர். ஒருநாள் சாமியார் பிச்சையெடுக்க சென்றிருந்த சமயத்தில் ஒருவர் வந்தார். பிள்ளையாரை வணங்கி திருநீறு இட்டுக் கொண்டார். சாமியார் அமரும் குண்டுக்கல்லில் அமர்ந்தார்.


 திரும்பி வந்த சாமியாருக்கு குண்டுக்கல்லில் யாரோ புதியவர் அமர்ந்திருப்பதை பார்த்ததும் கோபம் வந்துவிட்டது. நான் உட்காரும் கல்லில் நீ எப்படி உட்காரலாம்? இப்போதே இடத்தைக் காலி பண்ணு, என்றார் வேகமாக. எல்லாவற்றையும் துறந்த சாமியாரான உங்களுக்கு, இந்தக் கல்லை விட மனசில்லையா? ஒன்பது கோடி சொத்துக்கு அதிபதியான பட்டினத்தார் துறவியானார். கையில் இருக்கும் திருவோட்டைக் கூட சொத்து என்று எண்ணி, அதை கீழே போட்டு உடைத்தார். 


ஆனால், உங்களால் ஒரு சாதாரணக் கல்லில், இன்னொருவன் உட்காருவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உம்மையும், இந்த ஊர்க்காரர்கள் சாமியார் என்று சொல்வதெல்லாம் கலியின் கொடுமை தான்! என்றார் ஆவேசமாக. இதைக் கேட்ட சாமியாருக்கு உண்மை உறைத்தது. ஒன்றும் சொல்ல இயலாமல் மவுனமாக நின்றார்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,       

No comments:

Post a Comment