Tourist Places Around the World.

Breaking

Monday 17 August 2020

குருவும் சீடரும் - ஆன்மீக கதைகள் (66)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


சிதம்பரத்தில் வாழ்ந்த சிவனடியார்களில் மறை ஞானசம்பந்தரும், உமாபதி சிவமும் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் சந்தானக் குரவர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.  


தில்லைவாழ் அந்தணரான உமாபதிசிவம், ஒருநாள் நடராஜருக்குப் பகல்நேர பூஜையை முடித்துவிட்டு, பல்லக்கில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.    பல்லக்கின் முன் ஒருவன் தீவட்டியைப் பிடித்துச் சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் மறை ஞானசம்பந்தர் நின்று கொண்டு, பல்லக்கில் செல்லும் உமாபதி சிவத்தைக் கண்டார். பகல்நேரத்தில் சூரியன் இருக்க, ஏன் தீவட்டியோடு செல்ல வேண்டும் என்ற பொருளில், ‘பட்ட மரத்தில் பகல் குருடு’ என்று உமாபதிசிவத்துக்கு கேட்கும்படியாக உரக்கச் சப்தமிட்டார்.


இதைக் கேட்ட உமாபதிசிவத்துக்கு சுருக்கென்றது. பல்லக்கில் இருந்து குதித்து, மறைஞானசம்பந்தரை நோக்கி ஓடினார். எப்படியாவது அவரைத் தன் குருவாக ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உமாபதி சிவத்திற்கு இருந்தது. உமாபதி சிவத்திடம் பிடிகொடுக்காமல் ஓடிய மறை ஞானசம்பந்தருக்கு பசி ஏற்பட்டது. 


ஒரு வீட்டின் முன் நின்று உணவு கேட்டார். அந்த வீட்டினர் மறை ஞானசம்பந்தரின் கையில் கூழை ஊற்றினர். அதனை ‘சிவப் பிரசாதம்’ என்று சொல்லிக் குடிக்கத் தொடங்கினார். இதற்குள் உமாபதி சிவம் ஓடிவந்து, மறை ஞானசம்பந்தரின் கைகளில் இருந்த வழிந்த கூழை, ‘குருபிரசாதம்’ என்று சொல்லிக் குடித்தார். அது முதல் மறை ஞானசம்பந்தருக்கு, உமாபதி சிவம் சீடரானார். 


சைவசித்தாந்த சாஸ்திரங்கள் பதினான்கில், ‘சித்தாந்த அட்டகம்’ என்னும் எட்டுச் சாஸ்திரங்களை உமாபதி சிவமே எழுதியிருக்கிறார்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் , 

No comments:

Post a Comment