Tourist Places Around the World.

Breaking

Sunday, 20 September 2020

பனி நதி கரைந்த மர்மம்

 

பனி நதி கரைந்த மர்மம்


திருப்பாவையின், "புள்ளின் வாய் கீண்டானை' பாடலில் "குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக்கிடத்தியோ?' என தன் தோழியிடம் கேட்கிறாள் ஆண்டாள். இந்த வரிக்கு ஒரு விளக்கம் உண்டு. யமுனைக்கரையில் மார்கழி அதிகாலையில் துறவிகளெல்லாம், நீராடக் காத்திருக்கிறார்கள். ஏன் காத்திருக்க வேண்டும்? குளித்து விட்டு போக வேண்டியது தானே என்றால், அவர்களால் அது முடியாது. 

தண்ணீர் உறைந்து பனியாய் மாறியிருக்கும். அப்போது கண்ணனை அடையத்துடிக்கும் கோபிகாஸ்திரீகள் அங்கே நீராட வருவார்கள். அவர்கள் நதியில் கால் வைப்பார்களோ இல்லையோ, அப்படியே பனி உருகி நதி பெருகி ஓட ஆரம்பித்து விடும். இதென்ன அதிசயம்! பனிக்கட்டியாய் இருந்த நதி, பெண்கள் கால் வைத்ததும் உருகியதா! எப்படி? 

இதன் ரகசியம் என்ன தெரியுமா? அந்த கோபிகைகளின் மனதிலும், உடலிலும் கிருஷ்ண தாபம் வெப்பமாய் பரவிக்கிடந்தது. அவர்கள் கால் வைத்தார்களோ இல்லையோ, அந்த வெப்பத்தால் பனி கரைந்து விட்டது. கோபிகைகளின் கிருஷ்ணபக்திக்கு ஒரு அளவே கிடையாதா!

ஆன்மீக துளிகள் , ஆன்மீக தகவல்கள் , ஆன்மீக குறிப்புகள் , ஆன்மீக பரிகாரங்கள் , ஆன்மீக ரகசியங்கள் , ஆன்மீக வழிபாடு ,  ஆன்மீக செய்திகள் , ஆன்மீக அதிசயங்கள் , ஆன்மீக சிந்தனைகள் , ஆன்மீகத் தகவல் ,  aanmeega thagaval , aanmeega thuligal , aanmeegam tips tamil , aanmeega ragasiyam , aanmeega ulagam , siddhar teachings, siddhar noolgal 

No comments:

Post a Comment