மகான் அழுக்கு சித்தர்
MAHAN SRILASRI AZHUKKU SIDDHAR
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
பொள்ளாச்சியின் அருகில் உள்ள வேட்டைகாரன் புதூர் என்ற கிரமத்தில் மகான் அழுக்கு சித்தர் திருகோயில் உள்ளது. அழுக்கு சித்தர் என்றால் , மானிட வர்க்கத்தில் அவர் அவர் கர்மாவால் ஏற்படுக்கின்ற அழுக்கை நீக்கி அவர்களுக்கு நல்அருள் வழங்கியவர் என்று பொருள் கொள்ளலாம் …….
இதனை, மக்கள் சித்தர் குளிக்கமாட்டார் எப்போதும் அழுக்கு உடையுடன் காணப்பட்டதால் அவரை அழுக்கு சித்தர் என்று அழைத்தது ஏற்புடையது அல்ல …அதுபோல பார்த்தால் பழனி அருகில் கனகம்பட்டி என்ற ஊரில் மூட்டை சாமியார் என்று ஒருவர் இருந்தார். அவர் மானிடர்களின் கர்மாமூட்டையை களையக்கூடிய ஆற்றல் பெற்றவர் என்பதால் அந்த பெயர் வந்தது….மூட்டைகளை சுமந்தவர் அதனால் அவருக்கு மூட்டைசாமி.. என்று நினைப்பது தவறு……..
இவர்கள் இருவருமே கர்மா என்னு மூட்டையை களையகூடிய ஆற்றலை பெற்றவர் கள் ஆவார்கள்.
எனவே, இந்த பகுதியில் அழுக்கு சித்தரைபற்றி பார்போம்……..
இப்படி எண்ணற்ற சித்தர்கள் இந்த மன்னில் தோன்றி இந்த மானிடவர்கம் பாவ கர்மாவில் இருந்து விடுப்பட வழி காட்டினாலும் கூட நாம் இன்னும் கர்மாவில் இருந்து விடுப்பட வில்லை…..வாழ்வில் மேன்மை அடையவும் இல்லை. ஏன் என்று சிந்தியுங்கள்……
அழுக்கு சித்தர் தன் நலன் கருதாதவர், பொருட்கள் மீது பற்றற்றவர், எப்போதும் பிரணவ மந்திரத்தையும் ஐந்தெழுத்து மந்திரத்தையும் மனதில் ஓதிக்கொண்டேயிருப்பார்.. இவர் அடிக்கடி வெட்டவெளி தியானத்தை மேற்கொள்வார். பிரபஞ்ச சக்திகளின் ஆற்றலை பெற்றவர்….மக்களுக்கு உண்டான….நோய்களை விபூதியின் மூலம் குணபடுத்தினார்….
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியார்களுக்கு ஈசனின் அருள் ஆற்றலால் விபூதி பிரசாதத்தின் முலம் குறைகளை நிவர்த்தி செய்தார். அதன் மூலம் மக்களின் நன்மதிப்பை பெற்றர். இவர் தனக்கு என்று எதையும் வைத்து கொள்ளாதவர் …..
பற்றுற வாழ்கையில் வாழ்ந்தவர்….
இவர் எங்குயிருந்து வந்தார்? இவர் இருப்பிட இதே ஊரே சார்ந்ததாத என்பது சரியாக அரியமுடியவில்லை. அதுபோல் இவரது பிறப்பு பற்றியும் சரியான தகவல் இல்லை…….
இருந்தாலும் ஒரு ஆற்றல் பொருந்திய சித்தரைப்பற்றி மக்கள் தெரிந்துகொண்டு அவர் நல்லாசி பெற்று பலன் அடையும் பொருட்டு அவரது சித்துகளைப்பற்றியும கீழே பதிவு செய்யப்படுகிறது……
இவருக்கு என்று தனியே குரு இருந்த தகவலும் இல்லை பிற்பகுதியில் சேலத்தை சேர்ந்த அப்பாபைத்தியம் என்ற சித்தர் ஈடுபாடு உடையவராக இருந்துள்ளார். அவர் மூலம் சில திருபணிகள் நடந்தாக செவிவழி செய்திகள் உண்டு.
இவர் வேட்டைகாரன் புதூரில் தனது பக்தரின் ஒருவர் வீட்டில்
தங்கியிருந்துள்ளார். இவர் இறையாற்றல் மூலம் ஞானத்தை பெற்றமையால் எதையும் முன்கூட்டியே அறியும் ஆற்றல் பெற்றவர் ஆவார். ஒருசமயம் பக்தரின் வீட்டில் இட்லியும் தேங்காய் சட்னியும் இருந்ததை கண்டு அதனை கொண்டு வா என்றார்.
ஒரு ஆன்மீக அன்பர் புராண நூலை படித்தக்கொண்டுயிருந்த போது விளக்கில் எண்ணெய் இல்லை. உடனே சித்தர் அதில் இருந்த தண்ணீரை உற்றி விளக்கை எரியசெய்து அவரக்கு உதவினார்.
ஒரு சமயம் அந்த ஊருக்கு அருகில் உள்ள ஒடைகுளம் என்ற ஊரில் சிவ கீர்த்தனை நடந்துக்கொண்டுயிருந்து. அங்கு சென்ற இவர், காலில் நரகல் இருந்ததால் சபையில் நாற்றம் அடித்ததாம். சித்தரை பார்த்து காலை சுத்தம் செய்ய சொன்னார்களாம். சித்தர் அவர்களை திட்டிவிட்டு போய்விட்டார். அவர் சென்றவுடன் அவ்விடத்தில் மல்லிகை ..முல்லை………ஜவ்வாது …..மனோரஞ்சிதம் போன்ற மலர்களின் வாடை கம..கம…என வீசியதாம். அப்போது மக்கள் இவர் சித்தர் என்பதை உணர்ந்தனர்….
ஒருசமயம் ஒரு டாக்டர் இவரை தவறாக புரிந்துக்கொண்டு சண்டையிட்டதால் டாக்டரின் காதுவீங்கி ஆபரேஷன் செய்துக்கொண்டு அந்த ஊரை விட்டுபோய்விட்டாராம். அதுபோல் ஒரு சமயம் ஈஸ்வரன் கோயில் லிங்கத்தின் மீது சுற்றியிருந்த கருநாகத்தை கையால் எடுக்கும் போது, அரவன் கடித்தும் இவர் இறக்காமையை கண்டு மக்கள் இவரை சித்தர் என்பதை உணர்ந்துக்கொண்டனர்.
சித்தர்களுக்கு இயற்கையை வெல்லும் ஆற்றல் உண்டு என்பதை இவர் மெய்ப்பித்துள்ளார். அதன்படி அருகில் உள்ள பெத்தநாயக்கனுருக்கு செல்லும் போது ஆழியாற்றில் தண்ணிரில் மூழ்கி கரைசேர்துள்ளார். அப்போது தமது நண்பரை பார்த்து, தண்ணீர் அதிகமாக இருப்பதால் யாரும் தண்ணீரில் இறங்கவேண்டாம் என்றும் நீங்கள் எல்லாம் சிங்கநல்லுர் வழியாக பெத்தநாயகனுருக்கு வாருங்கள் என்றார்.சித்தரின் ஆற்றலைக்கண்டு திகைத்தனர்.
மேலும் கனகமார்க்கமாக செல்லும் ஆற்றலைபெற்றவர் பழனி, சென்னை, திருவண்ணமலை, சிதம்பரம் போன்ற இடங்களுக்கு கனகமார்க்கமாக சென்று சிவனை வழிப்பட்டுள்ளார். கனமான பாறாங்கல்லை கூட, இவர் ஈசனின் விபூதியை போட்டு மிகவும் சுலபமாக தூக்கி நிறுத்துவார்.
சித்தர், தான் சமாதியாகும் இடத்தை, அதாவது, தற்போது ஜீவசமாதி இருக்கும் இடத்தை முன்கூட்டியே அறிந்து அங்கு வன்னி, வேம்பு, வில்வம் போன்ற மரக்கன்றுகளை வைத்து வளர்த்து வந்தார். பின்னாளில் அவர் அந்த மரத்தடியின் நிழலில் பணிரென்டு நாட்கள் தியானம் இருந்து பிரபஞ்ச சக்தியுடன் இரண்டரகலந்துள்ளார். அந்த இடமே இப்போது அழுக்குசித்தர்
திருகோயில் என்று அழைக்கப்படுக்கின்றது.
இவருக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரம் அன்று குருபூசை விழா நடைப்பெற்று வருக்கின்றது.
அன்பர்களே, இதில் சித்தர் சமாதியான இடம் திருவார் திரு அழுக்குச்சாமிகள் திருக்கோயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. அன்பர்களே சித்தர்களின் ஜீவசமாதி உள்ள இடங்களுக்கு சித்தர் பீடம் என்று தான் பெயரிடவேண்டும் , கோயில் என்பது இறைவனுக்கு மட்டுமே ஆகும்..!
mahans in palani , palani siddhargal , jeeva samadhi in palani , palani siddhar , siddhar temple in palani , palani siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in palani , siddhar temples in palani , palani sitthargal , siddhars in palani ,
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
mahans in palani , palani siddhargal , jeeva samadhi in palani , palani siddhar , siddhar temple in palani , palani siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in palani , siddhar temples in palani , palani sitthargal , siddhars in palani ,
No comments:
Post a Comment