Tourist Places Around the World.

Breaking

Monday 26 April 2021

ஸ்ரீலஸ்ரீ மஹா ஆனந்த சித்தர் / Srila Sri Aanandha Siddhar

 

ஸ்ரீலஸ்ரீ மஹா ஆனந்த சித்தர் 

SRILA SRI AANANDHA SIDDHAR

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் 6-12-1930-ல் பிறந்து நறுமணம் கமழும் மஞ்சள் விற்பனை செய்தவர். அவர் தனது 35-ம் வயதில் காளஹஸ்த்தி சிவபெருமானால் தமிழகத்தின் பல திருகோவில்களில் திருப்பணி செய்தார். பின்பு ஆந்திர மாநிலம் காளஹஸ்த்தி லோகுவாகுளம் பரத்வாஜீஸ்வரர் திருகோவிலில் அன்னதானம் செய்து வந்தார். 2002-ம் வருடம் 25-ம் நாள் இரவு 12மணியளவில் மஹா ஆனந்தர் முன் சிவபெருமான் தேர்ன்றி "நிவிர் பிறவிப் போற்றுத்தவர்". 


" நிவிர் ஆயிரம் ஆண்டுகள் வாழம் பேறு பெற்ற சித்தர்" நிவிர் மஹாதேவமலை சென்று குகையனுள் குடிகொண்டு, எம்மை வழிபட்டு பக்தர்களைக் காத்துக் கடவாயாக என்று கூறி மறைந்தார். மகா ஆனந்த சித்தர் இறைவனின் கட்டளைக்கிணங்க புறப்பட்டு மகா தேவமலையை அடைந்தார் இறைவன் மீண்டும் மகா ஆனந்த சித்தர் முன் தோன்றி நீவிர் இனி பல் துலக்குவதும், நீராடுவதும் சித்திரை-1 அன்றே என்றும், நீவிர் எவரிடமும் தர்மம் கேட்கக்கூடாது என்றும், "சகல செல்வங்களும் இங்கு வந்து குவியும்" என்றும், இம்மலைக்கு வருகை புரியும் பக்தர்களுக்கும் இம்மலையின் வாழும் அனைத்து ஜிவராசிகளையும் தீவினை நொடிகளிலிருந்து காக்க வேண்டும் என்றும், இனி தாங்கள் உணவு உண்ணவோ, தாகத்திற்கு நீர் அருந்தவோ கூடாது என்று கூறி இறைவன் மறைந்தார். சிவபெருமான் சிரசின் மீது அமர்ந்துள்ள ஐந்து தலை நாகத்தின் வடிவே சுவாமிகளின் சிரசின் மீது காணும் வடிவாகும்.

இதற்கு சுவாமிகள் நாடொறும் மணம் கமழம் மலர்களையும், நறுமணம் வீசும் இலைகளையும் வைத்து பூஜிக்கின்றார். நெருப்பின் மீது படுத்தும் தியானம் செய்திடும் சித்தர் பிரான் இவர். உயிர் வாழ உணவு இன்றியமையாததுதான் எனினும் உண்ணாமலும் உயிர் வாழ்வதும் சாத்தியமே என வாழ்ந்து காட்டிவரும் சிதத புருஷர் மகானந்தர், பல ஆண்டுகளா எவ்வகை உணவும் உண்பதில்லை, தண்ணிரும் அருந்துவதில்லை என்பது வியக்கத்தக்கது 


சித்தரும் சித்தவைத்தியமும் :

மானிட இனத்துக்கும் பெருமக்கள் வழங்கிய அரிய நன்கொடை சித்த மருத்துவம். நம் மகானந்த சித்தர் அவ்வரிசையில் அபூர்வ மூலிகைகளை போகர் சித்தர் திருவருளால் அறியப்பெற்று தீராத வியாதிகளை தீர்த்து வைக்கிறார். யோகம், ஞானம், மருத்துவம் ஆகிய முப்பெரும் சிறப்பு வாய்க்கப்பெற்றவர் நம் மகா ஆனந்த சித்தர். அரிய மூலிகை மருந்துகளால் வாய்பேச நிலையினர் குணம்பெற்றுள்ளனர். 


பிள்ளைப்பேறு இல்லாதோர் மகா ஆனந்த சித்தரை அணுகி வேண்ட ஸ்வாமிகள் இறைவனின் அருட்சக்தியாலும் தன் தவவலியாலும் வில்வம், விபூதி, மருந்து அளித்தால் மலடு நிங்கி மகப்பேறு அடைகின்றனர். 


மகாதேவ மலை சித்தர் அமைவிடம் சென்னை - பெங்களுர் இருப்புப்பாதையில் முக்கிய ரயில் சந்திப்பு காட்பாடி. காட்பாடியிலிருந்து மேற்கே குடியாத்தம் செல்லும் நெடுஞ்சாலையில் 19 வது கிலோ மீட்டரில் மகாதேவ மலைகான வரவேற்பு வளைவு உள்ளது. குடியாத்தம் நகரிலிருந்து காட்பாடி 11 வது கி. மீ தொலைவில் மகாதேவ மலை வரவேற்பு வளைவு உள்ளது.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


mahans in vellore , vellore siddhargal , jeeva samadhi in vellore , vellore siddhar , siddhar temple in vellore , vellore siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in vellore , siddhar temples in vellore , vellore sitthargal , siddhars in vellore ,

1 comment:

  1. Your blog is really well-written and has a good info for readers. For travelers, we will also suggest to read it as well as sharing with our clients who need it.

    Bharat Taxi
    Taxi Service in India

    ReplyDelete