Tourist Places Around the World.

Breaking

Wednesday 24 June 2020

காகபுஜண்டர் சித்தர் பாடல் (Part 1/3) / Kagabujandar Siddhar Padal in Tamil

காகபுஜண்டர் சித்தர் பாடல் - (Part 1/3)

Kagabujandar Siddhar Padal in Tamil - (Part 1/3)

காகபுஜண்டர் சித்தர் பாடல் (Part 2/3)

காகபுஜண்டர் சித்தர் பாடல் (Part 3/3)

1: சிறந்தபரா பரமாகி யெங்குந் தானாய்த்
தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிப்
பறந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
பல்லாயிரங் கோடி அண்டம் படைத்த போதம்
வரம்பெருகி யனந்தனந்தம் உயிரு மாகி
மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
சச்சிதா னந்தமதைப் பணிகு வோமே. 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


2: ஓமென்ற சுழுனையடா அண்ட வுச்சி
ஓமுடிந்த பட்டணத்துக் கப்பாற் சென்று
நாமென்று சொல்லற்று யோக ஞானம்
நாட்டுகிறேன் அஞ்சனமுந் திலதப் போக்கும்
வாமென்ற வயித்தியமும் அட்ட கர்மம்
வாதமென்ற வித்தையெல்லாந் தெளிவ தாகக்
காமென்ற வீடமதிற் கண்டு தேறிக்
காட்டுகிறேன் மெய்ஞ்ஞானக் கருவைப் பாரே. 

3: பாரேநீ யோகமென்ற வழியைச் சொல்வேன்;
பத்தடா ஐம்புலனைப் பரத்தி னூடே
சீரொருவர் தெரியாமல் மதங்கள் பேசித்
திருவான வுச்சியிலே சேரா மற்றான்
ஆரொருவன் ஆதாரம் வெவ்வே றென்றே
அடுக்கடுக்காய்ப் பன்னிரண்டு தலங்க ளென்று
வீரேதான் பேசியே மெலிந்து போவான்.
விடமுண்ட அண்டமதை விரும்பிக் காணே. 

4: காணப்பா தலமெல்லாம் அண்ட வுச்சி
கமலமடா பதினெட்டாங் கோட்டிற் சென்று
பூணப்பா மனத்தையுந்தான் பிசகொட் டாமற்
பூட்டடா பிரமத்திற் புகுந்தெந் நாளும்
வீணப்பா மந்திரங்க ளொன்று மில்லை
விதியில்லை மதியில்லை கெதியு மில்லை
தோணப்பா தோணுமடா மனமொன் றான
சுத்தமுடன் நீயிருந்து தவஞ்செய் வாயே. 

5: செய்யப்பா வாசிமுனி மகனே கேளு
தீர்க்கமுடன் முன்னுரைத்த ஆயி ரத்தில்
மெய்யப்பா சரக்குநீத் துவகை யெல்லாம்
மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கி னங்கள்
பொய்யப்பா சொல்லவில்லை ரத்னப் போக்குப்
புனிதமுடன் சரியாகச் சொல்லிப் போட்டேன்
வையப்பா இந்நூலில் மவுன மெல்லாம்
வகையாகச் சொல்லுகிறேன் பணிந்து கேளே. 

6: கேளப்பா கேசரமே அண்ட வுச்சி
கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுன மாகும்
ஆளப்பா பரப்பிரம யோக மென்றே
அடுக்கையிலே போதமுந்தான் உயரத் தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம்
வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டு போகும்
நாளப்பா அண்ட மெல்லாஞ் சத்தி யோடு
நடனமிடுஞ் சிலம்பொலியுங் காண லாமே. 

7: காணலாம் பிரமத்தில் நிர்ண யந்தான்
காட்டுகிறேன் வாசிமுனி கருவாய்க் கேளு
பூணலாம் அண்டவுச்சி தன்னில் நின்று
பொறிகளையு முண்டாக்கிப் புவனந் தன்னில்
தோணலாம் உயிர்ப்பயிரைப் படைத்தெந் நாளுந்
தொந்தமென்னும் ஏழுவகைத் தோற்ற மாகி
ஆணலாம் நாலுவகை யோனி யாகி அண்டமடா
அனந்தனந்த மான வாறே. 

8: வாறான பிரமத்தில் நடுவே மைந்தா!
வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக்
கூறாகப் பின்னியடா கீழே பாயுங்
கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு;
வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே
வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணிற் பின்ன லாகி
நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே. 

9: பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே
பத்திலே நரம்புவழி பாயும் போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி
அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு
காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்
கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்
வெற்றிபெற இன்னமுந்தா னுரைக்கக் கேளே. 

10: கேளப்பா மூலமடா லிங்கந் தன்னில்
கிருபையுடன் தண்டுக்குங் கீழ்மே லாக
நாளப்பா தமர்போலே பிடர் மார்க்கம்
நன்றாக ஓடுமடா நரம்பி னூடே
வாளப்பா அண்டமுட்டி வுயர மைந்தா!
வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே
தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச்
சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே. 

11: பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!
மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே. 

12: போமடா முன்சொன்ன நரம்பி னூடே
பூரித்து ரவிமதியுஞ் சுடர்தாம் மூன்றும்
ஆமடா பின்னியுங் கீழே பாயும்
அந்தரங்கந் தனைப்பார்க்க அடங்கிப் போகும்
நாமடா வெளிதிறந்து சொல்லி விட்டோம்
நாதாந்த பரப்பிரம நாட்டந் தன்னை
ஓமடா விந்துவுந்தான் அண்ட வுச்சி
உறுதியுடன் சித்தமதை யூன்றிப் பாரே. 

13: பாரான சாகரமே அண்ட வுச்சி
பதினாலு லோகமெல்லாம் பரத்தி னூடே
சீராகத் தெரியுமடா மவுன மார்க்கஞ்
சித்தான சித்துவிளை யாடிநிற்கும்.
வீரான மந்திரங்கள் பிறந்த தெப்போ?
விஷ்ணுவென்றும் பிரமனென்றும் வந்த தெப்போ
கூரான முக்குணங்க ளுதித்த தெப்போ?
கூறாத அட்சரத்தின் குறியைக் காணே. 

14: காணார்கள் பிரம்முந்தா னுதிக்கு முன்னே
கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ?
தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச்
சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து
வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே
வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு;
கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா!
குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே. 

15: முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது
மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சத்தியடா மனந்தானே யேக மாகத்
தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே. 

16: தானென்ற கற்பமடா மதுவுண் டக்கால்
சஞ்சார சமாதியென்ப ததற்குப் பேரு
ஊனென்ற பசிதீரும் கோபம் போகும்.
உதயகிரி தனிற்சென்றூ டுருவிப் பார்க்கத்
தேனென்ற திரையேழுந் தீய்ந்து போகுந்
திரிவாரே உச்சிநடுச் சென்ற போது
கோனென்ற கருவியெல்லா மொடுங்கிப் போகுங்
கூற்றுவனா ராட்டமதைப் பார்க்கலாமே. 

17: பார்க்கலாம் ஒருகாலை உயரத் தூக்கிப்
பாடுவா னொருகாலைத் தாழ விட்டே
ஏர்க்கையிலே மேல்நோக்குங் காலைக் கேளாய்
என்மகனே மதியென்ப ததற்குப் பேரு
கார்க்கையிலே கீழ்நோக்குங் காலை மைந்தா
கண்டுபார் ரவியென்று கருத லாகும்
மார்க்கமுடன் அண்டவுச்சி மேலே தானும்
மகத்தான வன்னியிருப் பிடந்தான் பாரே. 

18: பாரப்பா இதையறியார் சித்தர் கூடிப்
பார்தனிலே அறுபத்து நாலு யோகம்
ஆரப்பா இருக்குமென்று வெவ்வே றாக
அலைந்தலைந்து கெட்டவர்க ளனந்தங் கோடி
நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து
நிலையறிந்து கண்டவனே கோடிக் கொன்று
வீரப்பா பேசாமல் மனக்கண் ணாலே
விந்துவடா பாய்ந்ததலம் வெளியைக் காணே. 

19: காணாத காட்சியெல்லாங் கண்ணிற் கண்டு
காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன்
தோணாமல் நானலைந்து சிறிது காலம்
துருவமென்ற பிரமத்தை யடுத்துக்கேட்க
நாணாமல் அண்டவுச்சி தன்னி லேதான்
நாடியே மனத்தாலே நாட்ட மாகக்
கோணாமல் பாருமென்றே எனக்குச் சொல்லக்
கூசாமல் மனமொன்றா யிருத்தி னேனே. 

20: இருத்தியே இருதயத்தில் மனமொன் றாக
சுகபர மாம்பொருளை யிருத்தி யொன்றாய்
நிருத்தியே வெகுகோடி கால மட்டும்
நிருவிகற்பச் சமாதியிலே நிறைந்தெந் நாளும்
பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்கப்
பூலோக மெங்கு மொன்றாய் நிறைந்தென் மைந்தா!
கருத்தொன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கிக்
காரணத்தைக் கண்டுவிளை யாடுவாயே. 

21: விளையாடிப் போதமய மாக வுந்தான்
வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து
நிலையான அண்டமதில் நெற்றிக் கண்ணை
நீயறிந்தே அரவுவிடந் தன்னைப் போக்கி
அலையாம லாரொருவ ருறவு மற்றே
ஆயிழையாள் மோகமதை யதட்டித் தள்ளி
மலையாமற் பிரமமே துணையென் றெண்ணி
மவுனமென்று மந்தனையு மடக்கி நில்லே. 

22: நில்லென்றால் லோகத்தில் மனிதர் தாமும்
நிட்டையுடன் சமாதியுமே பொருந்தா மற்றான்
வல்லவர்போல் வேதபுரா ணங்காவ் யங்கள்
மந்திரங்கள் கோடானு கோடி யென்றும்
சொல்லுவார் கோவிலென்றுந் தீர்த்த மென்றுந்
திருடர்கள்தா னலைந்தலைந்து திரிவார் மட்டை
வெல்வதொரு பிரமநிலை யறியா மற்றான்
வேரற்ற மரம்போலே விழுவார் பாரே. 

23: பாரப்பா மலரெடுத்து லிங்கம் வைத்துப்
பார்த்தீப லிங்கத்தைப் பணியா மற்றான்
வீரப்பா நீராட்டிப் பூசை செய்து
வீணர்கள்தாம் கத்தபம்போற் கதறு வார்கள்
தேரப்பா மலரதனைக் கிள்ளும் போது
செத்தசனம் போலாச்சுத் தெளிந்து பாரு
காரப்பா மனங்கொண்டு பரத்தி னூடே
கண்டவரே கயிலாசத் தேகந் தானே. 

24: தானென்ற பிரமத்தை யடுத் திடாமல்
தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும்
ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும்
உதயகிரி பாராத வுலுத்த மாடு
வேனென்ற பொய்களவு கொலைகள் செய்து
 வேசையர்மே லாசைவைத்து வீண னாகிக்
கோனென்ற குருபாதம் அடைய மாட்டான்
கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே. 

25: பாரப்பா நாக்கையுந்தான் அண்ணாக் கேத்திப்
பார்த்தனிலே பார்த்தவர்க்குப் பலித மில்லை
ஆரப்பா கண்வெடிக்குந் தேகம் போகும்
அடயோக மென்பார்க ளாகா தப்பா!
சாரப்பா மனந்தனையண் ணாக்கில் நேரே
சார்ந்துமிகப் பார்க்கையிலே வாசி தானும்
வீரப்பா மேலடங்குங் கீழ்நோக் காது
வெட்டாத சக்கரத்தை யறிய லாமே. 

காகபுஜண்டர் சித்தர் பாடல் (Part 2/3)

காகபுஜண்டர் சித்தர் பாடல் (Part 3/3)

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


siddhar songs , siddhar songs lyrics in tamil , siddhar kagabujandar padal , siddhar kagabujandar padalgal , siddhar songs tamil , siddhar padalgal songs , siddhargal songs , sithargal songs , sithargal in tamil , sithargal songs lyrics in tamil , tamil sithargal songs ,

No comments:

Post a Comment