Tourist Places Around the World.

Breaking

Wednesday, 24 June 2020

கொங்கணர் சித்தர் பாடல் (Part 4/4) / Konkana Siddhar Songs in Tamil

கொங்கணர் சித்தர் பாடல் - (Part 4/4)

Konkana Siddhar Songs - (Part 4/4)

கொங்கணர் சித்தர் பாடல் (Part 1/4)

கொங்கணர் சித்தர் பாடல் (Part 2/4)

கொங்கணர் சித்தர் பாடல் (Part 3/4)

நூல் 

76: பாக்கிய மும்மகள் போக்கிய மும்ராச
போக்கிய மும்வந்த தானாக்கால்
சீக்கிரந் தருமஞ் செய்யவேண் டுங்கொஞ்சத்
திருப்ப ணிகள்மு டிக்கவேண்டும்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


77: திருப்பணி களைமு டித்தோ ருஞ்செத்துஞ்
சாகாத பேரி லொருவரென்றும்
அருட்பொ லிந்திடும் வேதத்தி லேயவை
அறிந்து சொன்னாளே வாலைப் பெண்ணே!

78: மெத்தை தனிலே படுத்திருந் துநாமும்
மெல்லிய ரோடு சிரிக்கும்போது
யுத்தகா லன்வந்து தான்பிடித் தால்நாமும்
செத்த சவமடி வாலைப் பெண்ணே!

79: ஏழை பனாதிக ளில்லையென் றாலவர்க்
கிருந்தா லன்னங கொடுக்க வேண்டும்;
நாளையென் றுசொல்ல லாகா தேயென்று
நான்மறை வேத முழங்குதடி.

80: பஞ்சை பனாதி யடியாதே யந்தப்
பாவந் தொலைய முடியாதே;
தஞ்சமென் றோரைக் கெடுக்கா தேயார்க்கும்
வஞ்சனை செய்ய நினையாதே.

81: கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்
காணாத வுத்தரம் விள்ளாதே;
பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற
பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே.

82: சிவன்ற னடியாரை வேதிய ரைச்சில
சீர்புல ஞானப் பெரியோரை
மவுன மாகவும் வையா தேயவர்
மனத்தை நோகவும் செய்யாதே.

83: வழக்க ழிவுகள் சொல்லா தேகற்பு
மங்கையர் மேல்மனம் வையாதே;
பழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை
பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே!

84: கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்
கொலைக ளவுகள் செய்யாதே
ஆடிய பாம்பை யடியா தேயிது
அறிவு தானடி வாலைப் பெண்ணே!

85: காரிய னாகினும் வீரியம் பேசவும்
காணா தென்றவ்வை சொன்னாளே;
பாரினில் வம்புகள் செய்யா தேபுளிப்
பழம்போ லுதிர்ந்து விழுந்தானே.

86: காசார் கள்பகை செய்யா தேநடுக்
காட்டுப் புலிமுன்னே நில்லாதே;
தேசாந்த ரங்களுஞ் செல்லா தேமாய்கைத்
தேவடி யாள்தனம் பண்ணாதே.

87: தன்வீ டிருக்க அசல்வீடு போகாதே
தாயார் தகப்பனை வையாதே;
உன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில்
ஓடித் திரிகிறாய் வாலைப் பெண்ணே!

88: சாதி பேதங்கள் சொல்லுகி றீர்தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ?
ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு.

89: பாலோடு முண்டிடு பூனையு முண்டது
மேலாக காணவுங் காண்பதில்லை;
மேலந்த வாசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்
வேண்டிப் பூசையைச் செய்திடுங்கள்.

90: கோழிக் கறுகாலுண் டென்றுசொன் னேன்கிழக்
கூனிக்கு மூன்றுகா லென்று சொன்னேன்;
கூனிக்கி ரண்டெழுத் தென்றுசொன் னேன்முழுப்
பானைக்கு வாயில்லை யென்று சொன்னேன்.

91: ஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேனம்
மானைக்குப் பானைக்கு நிற்குமேல் சூல்
மாட்டுக்குக் காலில்லை யென்றுசொன் னேன் கதை
வகையைச் சொல்லடி வாலைப் பெண்ணே!

92: கோயிலு மாடும் பறித்தவ னுங்கன்றிக்
கூற்று மேகற் றிருந்தவனும்
வாயில்லாக் குதிரை கண்டவ னுமாட்டு
வகைதெ ரியுமோ வாலைப் பெண்ணே!

93: இத்தனை சாத்திரந் தாம்படித் தோர்செத்தார்
என்றா லுலகத்தோர் தாம்சிரிப்பார்;
செத்துப்போய்க் கூடக் கலக்கவேண்டு மவன்
தேவர்க ளுடனே சேரவேண்டும்.

94: உற்றது சொன்னக்கா லற்றது பொருந்தும்
உண்டோ உலகத்தி லவ்வைசொன்னாள்;
அற்றது பொருந்து முற்றது சொன்னவன்
அவனே குருவடி வாலைப் பெண்ணே!

95: பூரண நிற்கும் நிலையறி யான்வெகு
பொய்சொல்வான் கோடிமந் திரஞ்சொல்வான்
காரண குருஅ வனுமல் லவிவன்
காரிய குருபொ ருள்பறிப்பான்.

96: எல்லா மறிந்தவ ரென்றுசொல் லயிந்தப்
பூமியி லேமுழு ஞானியென்று
உல்லாச மாக வயிறு பிழைக்கவே
ஓடித் திரிகிறார் வாலைப் பெண்ணே!

97: ஆதிவா லைபெரிதானா லும்அவள்
அக்காள் பெரிதோ சிவன்பெரிதோ!
நாதிவா லைபெரி தானா லும்அவள்
நாயக னல்ல சிவம்பெரிது.

98: ஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல்
அண்டாது மற்ற வியாதியெல்லாம்
பேயும் பறந்திடும் பில்லிவினாடியில்
பத்தினி வாலைப்பெண் பேரைச் சொன்னால்.

99: நித்திரை தன்னிலும் வீற்றிருப் பாளெந்த
நேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்;
சத்துரு வந்தாலும் தள்ளிவைப் பாள்வாலை
உற்றகா லனையுந் தானுதைப்பாள்.

100: பல்லாயி ரங்கோடி யண்டமு தல்பதி
னான்கு புவனமும் மூர்த்திமுதல்
எல்லாந் தானாய்ப் படைத்தவ ளாம்வாலை
எள்ளுக்கு ளெண்ணெய்போல் நின்றவளாம்.

101: தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும் மித்தமிழ்
செய்ய எனக்குப தேசஞ்செய்தாள்
நேசவான் வீரப் பெருமாள் குருசாமி
நீள் பதம் போற்றிக்கொண் டாடுங்கடி.

102: ஆறு படைப்புகள் வீடு கடைசூத்ர
அஞ்செழுத் துக்கும் வகையறிந்து
கூறு முயர்வல வேந்த்ரன் துரைவள்ளல்
கொற்றவன் வாழக்கொண் டாடுங்கடி!

103: ஆடுங்கள் பெண்டுக ளெல்லோ ருமந்த
அன்பான கொங்கணர் சொன்ன தமிழ்
பாடுங்கள் சித்தர்க ளெல்லோ ரும்வாலை
பரத்தைப் போற்றிக்கொண் டாடுங்கடி

104: சித்தர்கள் வாழி சிவன்வா ழிமுனி
தேவர்கள் வாழி ரிஷிவாழி
பத்தர்கள் வாழி பதம்வா ழிகுரு
பாரதி வாலைப்பெண் வாழியவே!

கொங்கணர் சித்தர் பாடல் (Part 1/4)

கொங்கணர் சித்தர் பாடல் (Part 2/4)

கொங்கணர் சித்தர் பாடல் (Part 3/4)

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்

siddhar songs , siddhar songs lyrics in tamil , siddhar konkanar padal , siddhar konkanar padalgal , siddhar songs tamil , siddhar padalgal songs , siddhargal songs , sithargal songs , sithargal in tamil , sithargal songs lyrics in tamil , tamil sithargal songs ,

No comments:

Post a Comment