கொங்கணர் சித்தர் பாடல் - (Part 2/4)
Konkana Siddhar Songs - (Part 2/4)
கொங்கணர் சித்தர் பாடல் (Part 3/4)
கொங்கணர் சித்தர் பாடல் (Part 4/4)
நூல்
26: அழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும்
வழுத்தி னேன்ஞானப் பழத்திலே
கழுத்தி லேமயேஸ் வரனு முண்டுகண்
கண்டு பாரடி வாலைப் பெண்ணே!
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
27: அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சிய ரேநிதம்
கொஞ்சி விளையாடும் வஞ்சியரே!
நெஞ்சிலே ருத்திரன் சூழிருப் பானவன்
நேருட னாமடி வாலைப் பெண்ணே!
28: தொந்தியி லேநடுப் பந்தியி லேதிடச்
சிந்தையிலே முந்தி யுன்றனுடன்
உந்தியில் விண்ணுவுந் தாமிருப் பாரிதை
உண்மையாய்ப் பாரடி வாலைப் பெண்ணே!
29: ஆலத்தி லேயிந்த ஞாலத்தி லேவருங்
காலத்தி லேயனு கூலத்திலே
மூலத்தி லேப்ரமன் தானிருந் துவாசி
முடுக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே.
30: தேருமுண்டு ஐந்நூறும் ஆணியுண் டேஅதில்
தேவரு முண்டுசங் கீதமுண்டே
ஆருண்டு பாரடி வாலைத் தெய் வம்மதில்
அடக்கந் தானடி வாலைப் பெண்ணே!
31: ஒன்பது வாயில்கொள் கோட்டையுண் டேஅதில்
உள்ளே நிலைக்கார ரஞ்சுபேராம்;
அன்புட னேபரி காரர்க ளாறுபேர்
அடக்கந் தானடி வாலைப் பெண்ணே!
32: இந்த விதத்திலே தேகத்தி லேதெய்வம்
இருக்கையில் புத்திக்க றிக்கையினால்
சந்தோட வாலையைப் பாராமல் மனிதர்
சாகிறதேதடி வாலைப் பெண்ணே!
33: நகார திட்டிப்பே ஆன தினால் வீடு
வான வகார நயமாச்சு;
உகார முச்சி சிரசாச் சேஇதை
உற்றுப் பாரடி வாலைப் பெண்ணே!
34: வகார மானதே ஓசையாச் சேஅந்த
மகார மானது கர்ப்பமாச்சே;
சிகார மானது மாய்கையாச் சேஇதைத்
தெளிந்து பாரடி வாலைப் பெண்ணே!
35: ஓமென்ற அட்சரந் தானுமுண் டதற்குள்
ஊமை யெழுத்து மிருக்குதடி;
நாமிந்தெ ழுத்தை யறிந்து கொண் டோம்வினை
நாடிப் பாரடி வாலைப் பெண்ணே!
36: கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை
வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்
எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காய
மென்றைக்கி ருக்குமோ வாலைப் பெண்ணே!
37: இருந்த மார்க்கமாய்த் தானிருந்து வாசி
ஏற்காம லேதான டக்கவேணும்;
திரிந்தே ஓடி யலைந்துவெந் துதேகம்
இறந்து போச்சுதே வாலைப் பெண்ணே!
38: பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில்
பூவில்லாப் பிஞ்சும் அனேகமுண்டு
மூத்த மகனாலே வாழ்வுமுண் டுமற்ற
மூன்றுபே ராலே அழிவுமுண்டு!
39: கற்புள்ள மாதர் குலம் வாழ்க நின்ற
கற்பை யளித்தவ ரேவாழ்க!
சிற்பர னைப்போற்றிக் கும்மிய டிகுரு
தற்பர னைப்போற்றிக் கும்மியடி.
40: அஞ்சி னிலேரண்டழிந்ததில் லையஞ்
சாறிலே யுநாலொ ழிந்ததில்லை;
பிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம்அது
பேணிப் போடலாம் வாலைப் பெண்ணே!
41: கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட் டானிரு
காலில்லா நெட்டையன் முட்டிக் கிட்டான்;
ஈயில்லாத் தேனெடுத் துண்டுவிட் டானது
இனிக்கு தில்லையே வாலைப்பெண்ணே!
42: மேலூரு கோட்டைக்கே ஆதர வாய்நன்றாய்
விளங்கு கன்னனூர்ப் பாதையிலே
காலூரு வம்பலம் விட்டத னாலது
கடுந டையடி வாலைப் பெண்ணே!
43: தொண்டையுள் முக்கோணக் கோட்டையி லேயிதில்
தொத்திக் கொடிமரம் நாட்டையிலே
சண்டைசெய் துவந்தே ஓடிப்போ னாள்கோட்டை
வெந்து தணலாச்சு வாலைப் பெண்ணே!
44: ஆசை வலைக்குள் அகப்பட்ட தும்வீட
அப்போதே வெந்தே அழிந்திட்டதும்
பாச வலைவந்து மூடிய தும்வாலை
பாதத்தைப் போற்றடி வாலைப் பெண்ணே!
45: அன்ன மிருக்குது மண்டபத் தில்விளை
யாடித் திரிந்ததே ஆண்புலியும்
இன்ன மிருக்குமே யஞ்சுகி ளியவை
எட்டிப் பிடிக்குமே மூன்று கிளி;
46: தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது
மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும்
ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தை
இருந்து விழிப்பது பாருங்கடி.
47: மீனு மிருக்குது தூரணி யிலிதை
மேய்ந்து திரியுங் கலசா வல்;
தேனு மிருக்குது போரையிலே யுண்ணத்
தெவிட்டு தில்லையே வாலைப் பெண்ணே!
48: காகமிருக்குது கொம்பிலே தான்கத
சாவ லிருக்குது தெம்பிலேதான்;
பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம்
பார்த்ததால் தெரியுமே வாலைப் பெண்ணே!
49: கும்பிக் குளத்திலே யம்பல மாமந்தக்
குளக்க ருவூரில் சேறு மெத்த;
தெம்பி லிடைக்காட்டுப் பாதைக ளாய் வந்து
சேர்ந் தாராய்ந்துபார் வாலைப் பெண்ணே!
50: பண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரண்டு
கெண்டை யிருந்து பகட்டுதடி;
கண்டிருந் துமந்தக் காக்கையு மேயஞ்சி
கழுகு கொன்றது பாருங்கடி!
கொங்கணர் சித்தர் பாடல் (Part 1/4)
கொங்கணர் சித்தர் பாடல் (Part 3/4)
கொங்கணர் சித்தர் பாடல் (Part 4/4)
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
siddhar songs , siddhar songs lyrics in tamil , siddhar konkanar padal , siddhar konkanar padalgal , siddhar songs tamil , siddhar padalgal songs , siddhargal songs , sithargal songs , sithargal in tamil , sithargal songs lyrics in tamil , tamil sithargal songs ,
No comments:
Post a Comment