Tourist Places Around the World.

Breaking

Wednesday, 24 June 2020

கொங்கணர் சித்தர் பாடல் (Part 3/4) / Konkana Siddhar Songs in Tamil


கொங்கணர் சித்தர் பாடல் - (Part 3/4)

Konkana Siddhar Songs - (Part 3/4)

கொங்கணர் சித்தர் பாடல் (Part 1/4)

கொங்கணர் சித்தர் பாடல் (Part 2/4)

கொங்கணர் சித்தர் பாடல் (Part 4/4)

நூல் 

51: ஆற்றிலே யஞ்சு முதலைய டியரும்
புற்றிலே ரண்டு கரடியடி;
கூற்றனு மூன்று குருடன டிபாசங்
கொண்டு பிடிக்கிறான் வாலைப் பெண்ணே!

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


52: முட்டை யிடுகு தொருபற வைமுட்டை
மோசம் பண்ணு தொருபறவை;
வட்டமிட் டாரூர் கண் ணியிலி ரண்டு
மானுந் தவிக்குது வாலைப் பெண்ணே!

53: அட்டமா வின்வட்டம் பொட்டலி லேரண்டு
அம்புலி நிற்குது தேர்மேலே;
திட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம்
செந்தண லானதே வாலைப் பெண்ணே!

54: முக்கோண வட்டக் கிணற்றுக்குள் ளேமூல
மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத் தில்வாலை
அமர்ந்தி ருக்கிறாள் வாலைப் பெண்ணே!

55: இரண்டு காலாலொரு கோபுர மாம்நெடு
நாளா யிருந்தே அமிழ்ந்து போகும்;
கண்டபோ துகோபு ரமிருக் கும்வாலை
காணவு மெட்டாள் நிலைக்கவொட்டாள்.

56: அஞ்சு பூதத்தை யுண்டுபண் ணிக் கூட்டில்
ஆறா தாரத்தை யுண்டு பண்ணிக்
கொஞ்ச பெண்ணாசை யுண்டு பண்ணி வாலை
கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள்.

57: காலனைக் காலா லுதைத்த வளாம்வாலை
ஆலகா லவிட முண்டவளாம்;
மாளாச் செகத்தைப் படைத்தவ ளாமிந்த
மானுடன் கோட்டை இடித்தவளாம்.

58: மாதாவாய் வந்தே அமுதந்தந் தாள்மனை
யாட்டியாய் வந்து சுகங்கொடுத்தாள்
ஆதர வாகிய தங்கையா னாள்நமக்
காசைக் கொழுந்தியு மாமியானாள்.

59: சிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை
செங்காட்டுச் செட்டியைத்தா னுதைத்தாள்;
ஒருத்தியாகவே சூரர்த மைவென்றாள்
ஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள்.

60: இப்படி யல்லோ இவள் தொழி லாமிந்த
ஈனா மலடி கொடுஞ்சூலி;
மைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த
வயசு வாலை திரிசூலி.

61: கத்தி பெரியதோ யுறைபெரி தோவிவள்
கண்ணு பெரிதோ முகம் பெரிதோ?
சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான்
சற்றே சொல்லடி வாலைப் பெண்ணே!

62: அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல
அப்படி வாலை பெரிதானால்
பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல
பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி

63: மாமிச மானா லெலும்புமுண் டுசதை
வாங்கி ஓடு கழன்றுவிடும்;
ஆமிச மிப்படிச் சத்தியென் றேவிளை
யாடிக் கும்மி அடியுங்கடி.

64: பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் விளையாதென்று
கண்டுகொண் டுமுன்னே அவ்வைசொன் னாளது
வுண்டோ வில்லையோ வாலைப் பெண்ணே!

65: மண்ணுமில் லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்
வாசமில் லாமலே பூவுமில்லை;
பெண்ணுமில்லாமலே யாணுமில் லையிது
பேணிப்பாரடி வாலைப் பெண்ணே!

66: நந்தவனத்திலே சோதியுண் டுநிலம்
நித்திய பேருக்கு நெல்லுமுண்டு;
விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்
விட்ட குறைவேணும் வாலைப் பெண்ணே!

67: வாலையைப் பூசிக்கச் சித்தரா னார்வாலைக்
கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்;
வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத் தாரிந்த
விதந்தெ ரியுமோ வாலைப் பெண்ணே!

68: வாலைக்கு மேலான தெய்வமில் லைமானங்
காப்பது சேலைக்கு மேலுமில்லை;
பாலுக்கு மேலான பாக்கியமில் லைவாலைக்
கும்மிக்கு மேலான பாடலில்லை.

69: நாட்டத்தை கண்டா லறியலா குமந்த
நாலாறு வாசல் கடக்கலாகும்;
பூட்டைக் கதவைத் திறக்கலா கும்இது
பொய்யல்ல மெய்யடி வாலைப் பெண்ணே!

70: ஆணும்பெண் ணும்கூடி யானதனாற் பிள்ளை
ஆச்சுதென் றேநீரும் பேசுகின்றீர்;
ஆணும்பெண் ணுங்கூடி யானதல் லோபேதம்
அற்றொரு வித்தாச்சு வாலைப் பெண்ணே!

71: இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே
என் வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவே;
அன்றைக் கெழுத்தின் படிமுடி யும்வாலை
ஆத்தாளைப் போற்றடி வாலைப் பெண்ணே!

72: வீணாசை கொண்டு திரியா தேயிது
மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு
காணாத வாலையைக் கண்டுகொண் டாற்காட்சி
காணலா மாகாய மாளலாமே.

73: பெண்டாட்டி யாவதும் பொய்யல்ல வோபெற்ற
பிள்ளைக ளாவதும் பொய்யல்லவோ?
கொண்டாட்ட மான தகப்பன்பொய் யேமுலை
கொடுத்த தாயும் நிசமாமோ?

74: தாயும் பெண் டாட்டியுந் தான்சரி யேதன்யம்
தாமே யிருவருந் தாங்கொடுத்தார்;
காயும் பழமுஞ் சரியா மோஉன்றன்
கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப் பெண்ணே!

75: பெண்டாட்டி மந்தைமட்டும்வரு வாள்பெற்ற
பிள்ளை மசானக் கரையின் மட்டும்;
தெண்டாட்டுத் தர்மம் நடுவினி லேவந்து
சேர்ந்து பரகதி தான் கொடுக்கும்.

கொங்கணர் சித்தர் பாடல் (Part 1/4)

கொங்கணர் சித்தர் பாடல் (Part 2/4)

கொங்கணர் சித்தர் பாடல் (Part 4/4)

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்

siddhar songs , siddhar songs lyrics in tamil , siddhar konkanar padal , siddhar konkanar padalgal , siddhar songs tamil , siddhar padalgal songs , siddhargal songs , sithargal songs , sithargal in tamil , sithargal songs lyrics in tamil , tamil sithargal songs ,

No comments:

Post a Comment